jammu

Curfew in Srinagar காஷ்மீரில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு

The Jammu and Kashmir administration has ordered a strict curfew in Srinagar district on August 4 and 5 as the union territory marks one year of its formation as well as the abrogation of Article 370 and 35A, that granted the erstwhile state a special status.  

Report Ring News

 

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது.  இந்த நாளை, பிரிவினைவாத அமைப்புகளும், பாகிஸ்தான்., ஆதரவு பெற்ற குழுவினரும் கறுப்பு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாரும் உளவுத்துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

இதனையடுத்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு காஷ்மீர் மாநிலம் முதல் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா சூழ்நிலையில், மருத்துவ அவசர நிலை, உரிய அடையாள அட்டையுடன் அதிகாரிகள் நடமாட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு ஆக., 5ல் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top