ram 660 6

PM Modi in Ayodhya உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன: மோடி

Prime Minister Narendra Modi today performed Bhoomi Poojan and laid the foundation stone of Grand Ram Temple in Ayodhya. With this ceremony, the construction of Ram Temple in Ayodhya starts today. 

Report Ring News

 

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஆக., 5) நடந்தது . 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

2020 8largeimg 721615168

ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஒரு கட்டத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.சரயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.வாழ்க்கையில் மிகவும் வியப்புக்கு உரிய விஷயங்கள் நிறைவேறி உள்ளன.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை  மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம்.நமது நீதித்துறையின் மாண்புக்கு சான்றாக ராமர் கோயில் விளங்குகிறது.

modi 11

உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றுக்கு சான்று அளிக்கும் வகையில் உலகமே பார்க்கிறது.

ஸ்ரீ ராம் பெயரைப் போலவே அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்த பிரமாண்டமான ராமர் கோயில் இந்திய கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன். இது முழு மனிதகுலத்தையும் உலகம் உள்ள வரை காக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top