jee

JEE பிரதான நுழைவுத் தேர்வுகள் இன்று தொடங்கியது

Joint Entrance Examination (JEE-Main) for admission in top engineering colleges in the country commenced today with unprecedented preparations. About 9.58 lakh aspirants have registered for the exam to be conducted from September 1 to 6 across 660 centers.

கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட JEE பிரதான நுழைவுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட மையங்களில், வருகிற 6-ந் தேதி வரை இத்தேர்வு நடைபெறுமென தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் திரு.வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இத்தேர்வை எழுத 9,58,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக, ஒரு அறைக்கு 12 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கணினி மூலம் நடைபெறும் இத்தேர்வுக்கு, ஒரு ஷிப்டில் பயன்படுத்தப்படும் கணினி, அடுத்த ஷிப்டுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே, தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பெற்றோர், தேர்வு மையங்களின் முன்பாக கூட வேண்டாம் எனவும், திரு.வினீத் ஜோஷி கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி.க்கள் மற்றும் மத்திய அரசின் பிற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, இத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் ஆகும். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, இம்மாதம் 13-ந் தேதி நடைபெறவுள்ளது.

JEE மற்றும் NEET தேர்வுகளுக்கு வருபவர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்யும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கூட்டு நுழைவுத் தேர்வுகள் (JEE) மற்றும் மாநிலத்தில் உள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஆகியவற்றின் விண்ணப்பதாரர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளையும் ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது என்று மாநில தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தெரிவித்தார்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top