Onam festiva

ஓணம்: அத்தப்பூ கோலமிட்டு கோலகல கொண்டாட்டம் !

Thiruonam is the most auspicious day of Onam festival. This annual harvest festival of the State celebrates the visit of mythical and righteous King Mahabali.

ஓணம் பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு, கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் மட்டுமல்லாமல் அம்மாநிலத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஒணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாக ஓணம் பண்டிகை விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை அன்னைக்கு நமது நன்றியை தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று காலத்தில் நாம் உள்ளதால், அனைவரும் குறிப்பாக நோய்த் தொற்றுக்கு எளிதாக ஆளாகக்கூடியவர்கள் மிகுந்த கவனத்துடனும், இந்நோய் தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள ஓணம் வாழ்த்துச் செய்தியில் மிகவும் அரிதான பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்டிகையாக கொண்டாடப்படுவது அதன் சிறப்பு என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இம்மாதம் 22ஆம் தொடங்கிய ஓணம் பண்டிகை நாளை மறுநாள் வரை நடைபெறும்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top