modi

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும்: பிரதமர் மோடி

நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கோடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளே சுதந்திர தினம். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.

மக்கள் மனதில் நிலைக்க வேண்டியது, உள்நாட்டு பொருட்கள், உள்நாட்டு முன்னேற்றம். அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். சுயசார்பு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும்.நமது கலாச்சாரம் பாரம்பரியத்துக்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது என்றார். சுயசார்பு பாரதம் என்ற லட்சியம் மெய்ப்படும். நம்முடைய கனிமவளங்களை கொண்டு நாமே உற்பத்தியும் செய்ய வேண்டும். ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரமாக சுயசார்பு பாரதம் இருக்கிறது என்றார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம். இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது. இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்.

உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. கொரோனா வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது. கொரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைய கனவு காண்போம். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம். சுயசார்பு என்பது இன்றைய சூழலில் கட்டாயம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top