கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனாவுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டிரப்ம் அரசு பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே சீன – அமெரிக்க நல்லுறவு முறையாக பேணப்படவில்லை. இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம் சுமந்தி வந்த நிலையில் அமெரிக்காவின் சில நடவடிக்கைகளால் 2018-19 ஆம் ஆண்டுகளில் இருநாட்டுக்கிடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. கிட்டதட்ட வர்த்தகப் போர் என்று சொல்லும் அளவுக்கு இருதரப்பு வர்த்தகக் கொள்கைகள் மாற்றப்பட்டன.
இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் திடீர் என பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதற்கு சீனாதான் காரணம் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை உலக அரங்கில் அமெரிக்கா முன் வைத்து வருகிறது.
சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்வும் அதன் வளர்ச்சியை தடுக்கவும் திட்டமிட்டு அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீனா தெரிவிக்கிறது. இந்த கூற்றின் உண்மை தன்மையை நாம் உற்று நோக்கினாலே எளிதாக புரியும்,. கரோனா பரவல் காலத்தில் சீனா தன் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மிக எளிமையாக கட்டுப்படுத்தியுள்ளதோடு, உள்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பு நிகழாமல் காத்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருவதோடு, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அர்த்தமற்ற விமர்சனங்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் வாரி இறைத்து மக்களின் நலன்களில் அக்கறை இல்லாமல் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. பேரிடர் காலத்திலும், அரசியல் ஆதாயமும், ஊழலும் தலைவிரித்தாடுவதையே காணமுடிகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் பரவலால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இது 2008 ஆண்டின் நிதி நெருக்கடியை விட மோசமாக இருக்கும் என்று சிலர் கணித்துள்ளனர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த இக்கட்டான சூழலிலும் சீனாவுடன் பனிப்போர் மேற்கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவின் அரசியல் போக்கு மாறி இருக்கிறது.
உலக நாடுகளின் பார்வையில் சீனாவை மோசமான நாடாக சித்தரிக்க அமெரிக்கா முயன்று வருகிறது. அத்தகைய அமெரிக்காவின் முயற்சி வெற்றி பெறுமா.. தற்போதைய சூழலில் உலக நாடுகள் யார் பக்கம் என்பது பற்றி அலசிய போதுதான் நமக்கு சில தகவல்கள் கிடைத்தன.
சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செக் குடியரசு மற்றும் பிற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (சி.இ.இ.சி) சீனாவுக்கு எதிரான தனது கருத்துக்களை பரப்பினார்.
ஆனால் செக் குடியரசின் மத்திய அரசு அதற்கு ஆதரவளிக்கவில்லை என்பதைக் கண்ட பாம்பியோ அதிர்ச்சியடைந்தார். மேலும் செக்குடியரசின் தலைமை அமைச்சர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், பாம்பியோவிடம் உங்கள் சொந்த வேலைகளை பாருங்கள் என்று கடுமையாகவே கூறியுள்ளார். சீன முதலீடு அல்லது தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் அதன் தேசிய நலன்களை பாதிக்குமா என்பதை செக் குடியரசு தாமாக தீர்மானிக்கும் நீங்கள் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரித்திருப்பதால் செக் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை விட வலுபெற்றுருப்பதுதான் இதற்கான முக்கிய காரணங்களாகும் அதன் வளர்ச்சி முறையே 2.6 சதவீதம் மற்றும் 1.4 சதவீதமாக உள்ளது என உலக வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது. எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றைக் காட்டிலும் ஹவாய் தொலைத் தொடர்பு உபகரணங்கள் மிகவும் மேம்பட்டவை மற்றும் குறைந்த விலை கொண்டவை.
சீன நிறுவனம் விரைவில் 5 ஜி நெட்வொர்க்கை நாட்டிற்கு கொண்டு வர முடியும். ஹவாய் அல்லது எந்த சீன தொலைத் தொடர்பு சாதனங்களும் நாட்டிற்கு ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, செக் குடியரசு மற்றும் அதன் மக்கள் மீது சீனா உளவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் எதிரிகள் அல்ல என்பதையும் தெளிவாக கூறியுள்ளது.
உண்மையைச் சொன்னால், சீனா எந்த நாட்டையும் அச்சுறுத்தவில்லை.
சர்வதேச ஒத்துழைப்பு அல்லது உலகமயமாக்கலை ஊக்குவிப்பதில் ஆசியாவில் முதன்மையான சக்தியாக விளங்குகிறது. மேலும் சீனப் பொருட்களுக்கான சர்வதேச சந்தையை விரிவுப்படுத்துவது, நாணய மாற்றுப் பரிவர்த்தனையில் ரென்மென்பியை முக்கிய இடத்தில் கொண்டுவர வேண்டும் என கொள்கை முனைப்போடு செயல்படுகிறது。 குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் ரென்மென்பியை முக்கிய நாணய மாற்றாக கொண்டுவர முடிவு செய்துள்ளது。
அவ்வாறு கொண்டுவரும் போது அமெரிக்கா தன் சக்தியை உலக அரங்கில் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும்。 குறிப்ப்பாக ஆசியாவில் சீனா தவிர்க்க முடியாத சக்தியாக தலைநிமிர்ந்து நிற்கும்。 இத்தகைய சீனாவின் வளர்ச்சிப் போக்கு பிடிக்காத அமெரிக்கா அதற்கு எதிரான பல சதி வேலைகளை செய்து வருகிறது。 என்பதை இப்போது உலக நாடுகள் புரியத் தொடங்கியுள்ளன。