புதுடில்லி: ‘லடாக் விவகாரத்தில், நமது ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் பிரதமர் மோடி நம்பவில்லை’ என, காங்., – எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Alleging that Prime Minister Narendra Modi lied about the Eastern Ladakh stand-off, Congress leader Rahul Gandhi on Sunday said that Prime Minister allowed China to take Indian land.
தில்லியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘எல்லைப் பகுதியில், நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டவர்கள், அத்துமீறியவர்களுக்கு, நம் ராணுவம், தகுந்த பதிலடி கொடுதுள்ளது. அவர்கள் எந்த வழியை பின்பற்றினரோ, அதே வழியில் நம் வீரர்கள், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இறையாண்மையை பாதுகாக்கும் விஷயத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து ஆதரவு தந்தனர்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஆக., 16) தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் , ‘எல்லோரும் இந்திய ராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள். பிரதமரை தவிர. யாருடைய கோழைத்தனம் சீனாவை எங்கள் நிலத்தை எடுக்க அனுமதித்தது. யாருடைய பொய்கள் அவர்கள் அதை வைத்திருப்பதை உறுதி செய்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
சீனாவுடனான எல்லை நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடியை, ராகுல் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். ‘லடாக்கில் சீன ஊடுருவலை தடுக்கும் விவகாரத்தில் மோடி தலைமையிலான இந்திய அரசு அஞ்சுகிறது’ என ஏற்கனவே ராகுல் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

