president

தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்

खबर शेयर करें

President Ram Nath Kovind today virtually conferred the National Sports and Adventure Award 2020 on the occasion of National Sports Day. Mr Kovind presented Rajiv Gandhi Khel Ratna Award, Arjuna Award, Dronacharya Award, Dhyan Chand Award, Tenzing Norgay National Adventure Award and Rashtriya Khel Protsahan Puraskar.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று காணொலி காட்சி வாயிலாக வழங்கினார். இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்த் பிறந்தநாள் ஆண்டுதோறும், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, விருது பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாட்டை ஒருங்கிணைப்பதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றால், அதை வடகோடியில் உள்ள லடாக்கைச் சேர்ந்த மக்களும் கொண்டாடுவார்கள் என்பதுதான் விளையாட்டின் சிறப்பு என்றார். தேசத்தை நிர்மாணிப்பதிலும் விளையாட்டு ஒரு உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது, சாகச செயல்களுக்கான
விருதையும், தேசிய விளையாட்டு ஊக்க விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார். பெங்களூரு, புனே, சண்டிகர், கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட 11 நகரங்களிலிருந்து காணொலி காட்சி வாயிலாக விருதாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Follow us on Google News Follow us on WhatsApp Channel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top