chinese e commerse

சீனாவின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் ஆன்லைன் விற்பனை..!

Many Chinese firms turn to e-commerce for first time due to impact of coronavirus; with sales to overseas markets strong this past spring Chinese government has rolled out new policies aimed as supporting e-commerce, particularly to help small, export-oriented businesses

 

Report Ring News

இன்றைய உலகம் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தால் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்பதோடு, ஒவ்வொரு மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் இருந்து உலக நடப்புகளை அறிந்து கொள்வது வரைக்கும் இணையத்தின் தேவை மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் மனிதன் எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் ஆனால் அதற்கு என மெனக்கிட வேண்டி இருந்தது. இப்போது இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலையையும் முடித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு இணையம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதயம் இல்லாத மனிதனை கூட பார்த்துவிடாலாம் ஆனால் இனணையம் பயன்படுத்தாத மனிதனை காணமுடியாது என்பது போல் அது காலத்தின் தேவையாக மாறி இருக்கிறது.

e commerce

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக தொடங்கிய இணையப் பயன்பாடு இன்று ஒரு நாட்டின் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த பங்களிப்பை செய்து இருக்கிறது என்றால் அதன் அவசியம் நவீன உலகில் மிகவும் லாபகரமான தொழிலாகியுள்ளது. வெப் என்று சொல்லப்படும் வலைதளத்தின் மூலம் உலகில் யாரும் எதையும் எங்கிருந்து கொண்டும் வாங்கலாம் விற்கலாம் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய வழி தொழில்கள். 1995 ஆம் ஆண்டில் 1,000 க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அதுவும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்தது. ஆனால் அது 2005 வாக்கில்  30,000 ஆக அதிகரித்தது.  இப்படி படிப்படியாக வளரத் தொடங்கிய இணையப் பயன்பாடும் இணையத் தொழில்களும் இன்று பரந்து விரிந்து உலக அளவில் எல்லோர் கரங்களிலும் வலுப்பெற்று இருப்பதோடு, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தொழில் வளர்ச்சிக்கும் அத்தியாவசிய தேவை என்ற ரீதியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சீனாவில் பி 2 சி இணையவழி விற்பனை 2013 இல் 60 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டது. அது 2014 ஆம் ஆண்டில் 133 பில்லியன் டாலர்களை எட்டியது.

இன்று அமெரிக்காவைத் தாண்டிய சாதனைகளை சீனா இணைய வழி வர்த்தகத்தில் புரிந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.

சீனாவின் மின்வணிக சந்தையின் போட்டி ஆற்றலுக்கும் வெற்றிகரமான உத்திகளுக்கும் சில உதாரணங்களை இங்கே  குறிப்பிடலாம்.

  1. இளம் நுகர்வோர்களை குறிவைத்து குறிப்பிட்ட தேதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல். இதற்கு எடுத்துக்காட்டாக சீனாவின் புகழ்பெற்ற அலிபாபாவின் இரண்டு முக்கிய தளங்களான தாவோபா மற்றும் தமால், இணையத்தில் நவம்பர் 11, 24 மணி நேர இ-காமர்ஸ் கொண்டாட்டம் நடத்துவது. இந்த திட்டத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டில் 35 பில்லியன் ஆர்.எம்.பி (5.75 பில்லியன் டாலர்) வசூலித்தது, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ல் அலிபாபாவின் ஈ-காமர்ஸ் விற்பனையின் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. சீனாவில் ஒற்றையர் தின ஆன்லைன் விற்பனை மிகவும் பிரபலமான ஒன்றாகும்
  2. சிங்கிள்ஸ் டே ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்க, சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச தரவு மற்றும் சலுகை கட்டணங்களை வழங்குகின்றன. சீன மக்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதை அறிந்து ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரங்களை உலவ விடுகின்றன.
  3. ஆன்லைன் சந்தைகளை பயன்படுத்த உலகலாவிய நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான சில்லறை விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து ஒரே தளத்தில் கொண்டுவந்தப் பின் சமூக ஊடகங்களின் மூலம் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் கவரும் வகையில் சலுகைகள் மற்றும், இலவசப் பரிசுகள் அறிவித்தல்.
  4. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹவாவெய், ஜூலை 2014 இல் சீனா சந்தையில் தனது புதிய மாடலை வெளியிட்டபோது, ​​இது 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தளத்தை மேம்படுத்துவதற்காக பிராந்திய ரீதியில் குறிப்பிட்ட சமூக ஊடக நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்தது. தங்கள் தயாரிப்புகளின் மீதான ஆர்வத்தை பயன்பாட்டாளர்களிடம் தூண்டியதன் மூலம் குறிப்பிடத்தக்க சலசலப்பை உருவாக்க முடிந்தது.
  5. மேலும் பயனாளர்களுக்கு கட்டணம் இல்லாமல் அவர்கள் வாங்கும் பொருட்களை அவர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்ப்பது போன்ற திட்டங்களின் மூலம் குறுகிய காலத்தில் சீனா இணைய வணிகச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக கொண்டு சேர்ந்துள்ளது.

சீனாவில் ஆன்லைன் ஷாப்பிங் தொழில் 2020 முதல் ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 22.5% ஆக உயர்ந்து மொத்தம் 1.8 டிரில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு நடப்பு ஆண்டில் 20.1% வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. சீனாவில் தொழில்துறையின் விரைவான வளர்ச்சிக்கு காரணம் மின்வணிகத்தின் புகழ் மற்றும் ஆன்லைன் விற்பனையின் வளர்ச்சி ஆகும். மேலும், மொபைல் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவில்அதிகரித்துள்ளது.

மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழில்துறையின் வளர்ச்சியும் அதிகரித்து  வருகிறது.  குறிப்பாக கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஆன்லைனில் அதிக கொள்முதல் செய்யப்பட்டது,. இதனால் தொழில்துறையின் விற்பனை வருவாய் 2020 ஆம் ஆண்டில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தயாரிப்புகள் ஆன்லைனில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட இணையம் மூலம் வாங்க விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top